CASHEW NUT'S USEFULNESS

உண்பதற்கு சுவையாக இருக்கும் முந்திரி பழம், உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தையும் தரவல்லது. முந்திரி பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கனிம தாதுக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயினை வராமல் தடுக்க உதவும் தாவர வேதியங்கள் (அ) பைட்டோகெமிக்கல்ஸ் அதிக அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. முந்திரி பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (monounsaturated-fatty acids) ஒலியிக் மற்றும் பால்மிட்டோலெயிக் அமிலங்கள் அதிக அளவில் காணப்படுகிறது. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு தீமை விளைவிக்ககூடிய கொலஸ்ட்ராலை (low-density lipoprotein cholesterol) குறைத்து நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ராலை(high-density lipoprotein cholesterol) அதிரிக்க செய்கிறது. மேலும் , ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்கள் கரோனரி இதய நோயினை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆராய்ச்சி முடிவுகள் மூலமாக அறியமுடிகிறது. இதில் உள்ள, மெக்னீசியமானது, எலும்பு வலுவடைவதற்கு உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் இரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி மற்றும் சோர்வு ஏற்படுகிறது. முந்திரி பருப்பிலுள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர்ச்சி, விந்து உற்பத்தி, செரிமானம் மற்றும் நியூக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது. முந்திரி பருப்பில் அத்தியாவசிய வைட்டமின்களான பேண்டோதெனிக் அமிலம் (வைட்டமின் B-5), பைரிடாக்சின் (வைட்டமின் பி-6), ரிபோபிலாவின் மற்றும் தையமின் (வைட்டமின் பி-1) அதிக அளவில் உள்ளன. இதில், குறைந்த அளவிலான சியாசாந்தின் உள்ளது. இது கண்ணில் உள்ள கருவிழி படலத்தை பாதுகாக்க உதவுகிறது.

Comments

Post a Comment

comment here

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!