மாதுளம்பழம் சாப்பிட்டால் மார்பக புற்றுநோய் வராது

12742168_491051841080822_3208078304272611866_n
மாதுளம்பழம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்று நோய் வருவதற்கான வாய்ப்பு குறைவு என ஆய்வில் தெரியவந்துள்ளது. 

அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சியாளர் சங்கத்தின் “கேன்சர் பிரிவென்சன் ரிசர்ச்” பத்திரிகையில் இந்த தகவல் வெளியாகி உள்ளது.
அண்மைக் காலமாக, மார்பக புற்று நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோன் காரணமாகவே 4 ல் 3 பெண்களுக்கு புற்று நோய் ஏற்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹார்மோன் காரணமாக ஏற்படும் புற்று நோயிலிருந்து தப்பிக்க மாதுளம்பழம் சாப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
மாதுளம்பழத்தில் இயற்கையாகவே பைட்டோகெமிக்கல் உள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. எல்லஜிக் அமிலம் என்று அழைக்கப்படும் இது, புற்றுநோய் செல்கள் வளர்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
மாதுளம் பழத்தில் உள்ள பைட்டோகெமிக்கல் ஆஸ்ட்ரோஜென் எனப்படும் ஹார்மோனை கட்டுப்படுத்துகிறது. இதனால் மார்பக புற்றுநோய்க்கு காரணமான செல்கள் மற்றும் கட்டி வளர்வது தடுக்கப்படுகிறது” என கலிபோர்னியாவின் டாரேட்டில் உள்ள சிட்டி ஆப் ஹோப் மார்பக புற்றுநோய் ஆராய்ச்சி திட்டத்தின் இணை தலைவர் ஷியுவான் சென் தெரிவித்துள்ளார்.
மனிதர்கள் மற்றும் விலங்குகளுக்கு மாதுளம்பழம் கொடுத்து ஆய்வு செய்யப்பட்டது. புற்றுநோயை கட்டுப்படுத்துவதற்கான அமிலம் இருப்பது தெரியவந்துள்ளது. மாதுளையில் மருத்துவ குணங்கள் அதிகம். 

எனினும், இது ஆய்வக முடிவுதான். நிஜமாக இது சாத்தியமா என்பதை உறுதியாக கூற இயலாது” என ஓஹியோ ஸ்டேட் யுனிவர்சிட்டியின் இன்டர்னல் மெடிசின் துறை பேராசிரியர் கேரி ஸ்டோனர் கூறினார்.

Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!