ஜிம்முக்குப் போக சரியான வயசு

One-Arm-Tricep-Dips-300x277
உடலில் உள்ள கலோரிகள் எரிக்கப்பட்டு தசைகள் வலுப்பெறவும் அழகான உடல் அமைப்பு கிடைக்கவும் வழி செய்வதுதான் உடற்பயிற்சி.
ஆனால், ‘ஜிம்’ செல்வதற்கு வயது வரம்பு எதுவும் கிடையாது. ஆனால், ஒவ்வொரு வயதினரும் அவரவர் உடல்வாகுக்கு ஏற்ற உடற்பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்பது இங்கே முக்கியம்.

உடற்பயிற்சிகளில், கார்டியாக் ஃபிட்னெஸ் (Cardiac fitness), ஏரோபிக்ஸ் (Aerobics), வெயிட் லிஃப்டிங் ட்ரெயினிங் (weight lifting training) என மூன்று விதங்கள் இருக்கின்றன. சைக்கிளிங், ரெகம்பென்ட் பைக் (Recumbent Bike), ட்ரெட் மில் (Treadmill) போன்ற பயிற்சிகள் கார்டியாக் ஃபிட்னெஸ் உடற்பயிற்சிகள். 

ஏரோபிக்ஸ் பயிற்சிகளில், உடம்பில் உள்ள அனைத்து மூட்டுகளுக்கும் அதன் அதன் அசைவுகளுக்குத் தகுந்தாற்போன்று (எடை எதுவும் இன்றி) பல்வேறு திசைகளில் பயிற்சி மேற்கொள்ளப்படும்.

வெயிட் லிஃப்டிங் பயிற்சிகளில், அதிகமான எடை தூக்கி உடற்பயிற்சி செய்வார்கள். 18 வயதில் இருந்து 21 வயது வரையிலும் உடம்பில் உள்ள எலும்புகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். எனவே, இத்தகையப் பருவத்தில் இருப்பவர்கள், கார்டியாக் ஃபிட்னெஸ் மற்றும் ஏரோபிக்ஸ் பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்வது மிகவும் நல்லது


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!