குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது ஏன் தெரியுமா?

Baby-being-tonsured
நம் நாட்டில் நிறைய பழக்கவழக்கங்கள் காரணம் தெரியாமலேயே மக்களால் பின்பற்றப்பட்டு வருகிறது. 


ஆனால் அப்படி பின்பற்றப்படும் பழக்கவழக்கங்களுக்கு பின்னணியில் நிச்சயம் ஓர் உண்மை மறைந்திருக்கும்.

முறையாக சொன்னால் யாரும் பின்பற்றமாட்டார்கள் என்று நம் முன்னோர்கள் செய்த வேலை தான் இது. அதில் குழந்தை பிறந்த ஒரு வருடத்திற்குள் மொட்டை போடுவது என்பது ஒன்று.

பலரும் இது ஓர் குடும்ப வழக்கம், நேர்த்திக்கடன் என்று நினைத்து பின்பற்றி வருகிறார்கள். ஆனால் இதற்கு பின்னணியில் உள்ள உண்மையான காரணம் என்னவென்று யாருக்காவது தெரியுமா?
தெரியாதெனில், உங்களது எண்ணத்தை மாற்றி, இனிமேலாவது உண்மையான காரணத்தைத் தெரிந்து கொண்டு பின்பற்றுங்கள்.

கருவறையில் 10 மாதம்
பிறக்கும் முன் தாயின் கருவறையில் இருக்கிறோம். இந்த கருவறையில் என்ன சந்தனமும், பன்னீருமா நம்மைச் சுற்றி இருக்கும். இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் நாம் இருப்போம்.

கடல் நீர்
சாதாரணமாக கடல் நீரில் கை விரல்களை 5 நிமிடம் ஊற வைத்து, பின் அவற்றை நன்கு துடைத்துவிட்டு வாயில் வைத்தால் எப்படி உப்பு அப்படியே இருக்கிறது. 

5 நிமிடம் ஊற வைத்த கை விரல்களிலேயே உப்பு இருக்கையில், 10 மாதம் இரத்தம், சிறுநீர், மலம் போன்றவை நிறைந்த சூழலில் இருந்த நம் உடலில் அவை எவ்வளவு ஊறியிருக்கும்.

வெளியேறும் வழி
உடலினுள் சேரும் இந்த கழிவுகள் நம்மை விட்டு எளிதில் வெளியே வந்துவிட்டாலும், நம் தலையில் சேரும் கழிவுகள் மயிர் கால்கள் வழியாகத் தான் வெளியேற முடியும். 

ஆனால் அதற்கான வழிகள் குறைவு. அதற்காகத் தான் குழந்தை பிறந்த சில மாதங்களுக்குள் மொட்டைப் போடுகின்றனர்.

மொட்டை போடாவிட்டால்?
ஒருவேளை அப்படி மொட்டை போடாவிட்டால், அக்கழிவுகள் தலையில் அப்படியே தங்கி, பிற்காலத்தில் அதுவே பல நோய்கள் வருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும்.

நேர்த்திக்கடன்
இப்படி உண்மைக் காரணத்தைச் சொன்னால், பலரும் அலட்சியப்படுத்தி பின்பற்றமாட்டார்கள். எனவே தான் நேர்த்திக்கடன் என்ற பெயரில் நம் முன்னோர்களால் அது பரப்பப்பட்டது.

மூன்று வயதில் ஓர் மொட்டை
சிலர் தங்கள் குழந்தைக்கு மூன்று வயதில் ஒரு மொட்டையைப் போடுவார்கள். இதற்கு காரணம், முதல் மொட்டையின் போது சில கிருமிகள் விடுபட்டிருந்தால், இரண்டாவது மொட்டையின் போது வெளியேறிவிடும் என்பதற்காகத் தான்.

ஆன்மீக ரீதிக்கே மரியாதை
நம் மக்களிடையே அறிவியல் ரீதியாக சொல்வதை விட, ஆன்மீக ரீதியாக சொன்னால், கட்டாயம் செய்வார்கள் என்பதை நம் முன்னோர்கள் நன்கு அறிந்துள்ளனர். எப்படியோ, இப்போதாவது உண்மையான காரணத்தை தெரிந்து கொண்டோமே. அதுவே போதும்.

குறிப்பு
இனிமேலாவது ஒரு செயலைப் பின்பற்றும் முன் அதற்கான உண்மையான காரணத்தை தெரிந்து கொள்ள முயற்சித்து, அந்த காரணத்தை மற்றவர்களுக்கும் சொல்லி பின்பற்ற வையுங்கள்.


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!