திருமணத்திற்கு பிறகு வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள்

திருமணம்
திருமணம் என்பது ஓர் புதிய பாதை, புதிய பயணம். நீங்கள் உங்கள் கணவர் என ஆரம்பித்து உங்கள் குடும்ப உறுப்பினர் எண்ணிக்கையே இரட்டிப்பு மடங்கு உயர்ந்திருக்கும். 

நல்லதாக இருந்தாலும், கெட்டதாக இருந்தாலும் இவர்கள் அனைவரையும் கேட்டு தான் செய்ய வேண்டும்.

இனிமேல் நீங்கள் ஈருயிர் ஓர் உடல் என்ற புதிய பயணத்தை துவங்க போகிறீர்கள். இந்த பயணத்தில் உங்களுக்கான கடமைகள் அதிகம். 

இத்தனை நாட்கள் குடும்பமே உங்கள் மீது அக்கறையாக இருந்திருக்கும். இனிமேல், நீங்கள் உங்கள் குடும்பத்தின் மீது அக்கறையாக இருக்க வேண்டும். 

முக்கியமாக பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும். இதுவரை 

நீங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஓர் மாயை. எது நடந்தாலும் இன்னொரு வாய்ப்பில் மாற்றிக் கொள்ளலாம். ஆனால், இனிமேல் அது சற்று கடினம்.

நான், என் வாழ்க்கை என்ற எண்ணங்கள் மாறி, நாம், நம் வாழ்க்கை என மாறிவிடும். எதுவாக இருப்பினும் ஒரு தடவைக்கு, இரண்டு தடவை யோசித்து முடிவெடுக்க வேண்டும். 

முன்னர் கேளிக்கை அதிகமாகவும், கடமைகள் குறைவாகவும் இருந்திருக்கும். இனிமேல் அப்படி இருக்க முடியாது. கடமைகளுக்கு முக்கியத்துவம் அளித்து அவற்றை முதலில் செய்து முடிக்க வேண்டும்.

இல்லறத்தில் அடிக்கடி சண்டைகள் வரும். அதை சுமுகமாக, சுவையாக முடிப்பதா அல்லது சச்சரவுக்குள்ளாக்குவதா என்பது உங்கள் கையில் தான் இருக்கிறது. 

இதுவரை முன்னுரிமை என்பது உங்களுக்கும், உங்களை சார்ந்த விஷயங்களுக்கு மட்டுமே கொடுத்திருப்பீர்கள். ஆனால், இனிமேல் அதை சரியாக உணர்ந்து, புரிந்து அளிக்க வேண்டும்.

இரு குடும்பங்களை சேர்த்து உங்களது குடும்ப, உறவினர்கள் எண்ணிக்கை இரட்டிப்பு ஆகியிருக்கும். இனிமேல், இரு குடும்பத்தை பற்றி யோசித்து முடிவெடுக்க வேண்டும்.


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!