வைட்டமின் 'டி' குறைவால் உண்டாகும் விளைவுகள்


ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.'s photo.
பல்வேறு வைட்டமின்களின் உதவியால்தான் நம் உடல் எந்த வித நோயுமின்றி இயங்குகிறது.
அதே போல் தான் வைட்டமின் 'டி' நம் உடல்நலத்தை காக்க அவசியமான ஒன்றாக இருக்கிறது. அத்தகைய வைட்டமின் 'டி' நம் உடலில் இருந்து குறைந்தால் பல வகையான நோய்கள் ஏற்படுகிறது.
வைட்டமின் 'டி' குறைவதற்கான காரணங்கள்:
* உணவு கட்டுப்பாட்டினால் சரியாக உணவை உட்கொள்ளாததால் வைட்டமின் டி குறைவு ஏற்படுகிறது.
* சூரிய ஒளி நமது உடலின் மேல் படாமல் இருத்தல்.
* குடலில் இருந்து வைட்டமின் 'டி'யை உறிஞ்சும் தன்மை குறைவாக இருத்தல்.
* சிறுநீரக மற்றும் கல்லீரல் கோளாறுகள் மூலம் வைட்டமின் 'டி' உடலுக்கு கிடைக்கால் போதல்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் வைட்டமின் 'டி' குறைபாடு உண்டாகிறது. 
தாய்ப்பாலில் வைட்டமின் 'டி' குறைவாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் மேல் சூரிய ஒளி படுவதனை தவிர்க்கின்றனர். 
பெரியவர்களும் பெரும்பாலும் சூரிய ஒளியிலிருந்து விலகியே இருக்கின்றனர். இதனால் எலும்பு தொடர்பான 'ரிக்கெட்ஸ்' போன்ற நோய்கள் உண்டாகின்றன. 
எனவே, கால்சியம் அடங்கிய உணவுப்பொருட்களை உண்பதன் மூலமும், சூரிய ஒளி உடலில் படுவதன் மூலமும் வைட்டம்ன் 'டி' குறைப்பாட்டை நீக்கி ஆரோக்கியமான வாழ்வை பெறலாம்.

Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!