காடை முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமா?

quil_egg_002
ஆரோக்கிய வாழ்க்கைக்கு நாள்தோறும் ஒரு முட்டை சாப்பிடுங்கள் என மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.

அதனால் கோழி முட்டையை மட்டும் சாப்பிடாமல், காடை முட்டையையும் கொஞ்சம் உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

காடை முட்டையில் என்ன சத்துக்கள் உள்ளன?

100 கிராம் காடை முட்டையில், Saturated fat 3.6 கிராம், Polyunsaturated fat 1.3 கிராம், Monounsaturated fat 4.3 கிராம் அடங்கியுள்ளன.

மேலும், சோடியம் – 141 மிகி, பொட்டாசியம் – 132 மிகி, கார்போஹைட்ரேட் – 0.4 கி, சர்க்கரைச்சத்து – 0,4 கி, புரதச்சத்து – 13 கி, விட்டமின் A – 10 சதவீதம், கால்சியம் – 6 சதவீதம், விட்டமின் D – 13 சதவீதம், விட்டமின் B12 – 26 சதவீதம் மற்றும் மக்னீசியம் – 3 சதவீதம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

மருத்துவ பயன்கள்

விட்டமின் A சத்து அதிக அளவில் இருப்பதால் தெளிவான கண்பார்வைக்கு உதவுகிறது, மேலும் கண்புரை பிரச்சனை மற்றும் வயதான காலத்தில் macular சிதைந்துபோகாமல் இருக்க உதவுகிறது.

இதில் ஆரோக்கிய கொழுப்பு நிறைந்துள்ளதால், கொலஸ்ட்ரால் பிரச்சனை ஏற்படாது. அதுமட்டுமின்றி உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காடை முட்டையை உணவில் சேர்த்துகொள்ளலாம்.

கனிமச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது, மேலும், உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.

புரோட்டின் சத்து நிறைந்துள்ளதால் திசுவளர்ச்சி, தசை, எலும்பு, மற்றும் இரத்த நாளங்கள் போன்றவற்றின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

அதுமட்டுமின்றி, சிறுநீர்ப்பை பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக கற்கள் பிரச்சனை போன்றவற்றை குறைக்கிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட், விட்டமின் A மற்றும் விட்டமின் C சத்துக்கள் புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.

உடலில் வீக்கம் போன்ற அலர்ஜி பிரச்சனை ஏற்பட்டால் காடை முட்டையை சாப்பிடுவதன் மூலம் அலர்ஜி பிரச்சனை குணமாகும்.

ஹார்மோன் மற்றும் நொதித்தல் செயல்பாடுகள் போன்ற வளர்சிதை மாற்றத்திற்கு விட்டமின் B உதவுகிறது.

இதில் உள்ள நுண்ணோட்டப் பொருட்கள் உடலுக்கு அதிக ஆற்றல் தருகின்றன, காலை உணவோடு இதனை சேர்த்துக்கொண்டால், அன்றைய நாள் முழுவதும் சுறுசுறுப்போடு செயல்படலாம்.


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!