இடுப்பு சதையை குறைக்கும் ட்விஸ்டர் க்ரஞ்சஸ் பயிற்சி

h37-300x296
உடலின் தேவையற்ற இடங்களில் சேர்ந்திருக்கும் கொழுப்பை எரிக்கவும், உடல் பருமனைக் குறைக்கவும் இந்த பயிற்சி துணை செய்கிறது. 
தொடர்ந்து இந்தப் பயிற்சிகளை செய்துவந்தால், இடுப்பு, தொடையில் சதை குறைந்து ‘ஸ்லிம்’மாகும்’.

விரிப்பில் இரண்டு கால்களையும் 2 அடி அகட்டிய நிலையில் நிற்க வேண்டும். 
கைகளுக்கு ஏதுவான அளவில், பிடிப்பாக ஒரு ஸ்டிக் ஒன்றை தலைக்கு பின்னால் இரண்டு கைகளாலும் பிடித்துக்கொள்ளவும். 

இப்போது, அப்படியே இடது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். பிறகு வலது பக்கமாக உடலைத் திருப்ப வேண்டும். இதுபோல் மாறி மாறி உடலைத் திருப்ப வேண்டும். கைகள் அதே நிலையிலேயே இருக்க வேண்டும்.

இவ்வாறு செய்யும் போது இடுப்பில் சைடு பக்கங்களில் சதைகள் இழுப்பதை போல் உணர முடியும். 

ஆரம்பத்தில் தொடர்ந்து ஒவ்வொரு பக்கத்திற்கும் 15 முறை செய்ய வேண்டும். 

படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முதல் 40 வரை செய்யலாம். இந்த பயிற்சி செய்ய ஆரம்பித்த 1 மாதத்தில் நல்ல பலன் தெரிவதை காணலாம்.

Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!