Skip to main content

இந்தியாவில் உருவான யோகா



இந்தியாவில் உருவான யோகா கலைக்கு அமெரிக்க கோர்ட் அதரவு
இது நமது பாரம்பரியம் மிக்க இந்தியக் கலாச்சாரத்துக்கு சர்வதேச அளவில் கிடைத்த பெருமை.

அமெரிக்காவின் சில பள்ளிகளில் யோகா கற்றுக் கொடுக்கப்பட்டு வருகிறது. இதற்கு பெற்றோர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர் . அமெரிக்க கலாச்சார கொள்கைக்கு இது முற்றிலும் எதிரானது எனவும், யோகா ஒரு குறிப்பிட்ட மதத்தை பின்பற்ற வலியுறுத்துவதாக இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கிழக்கத்திய மதங்களை பரப்பும் விதமாக யோகா பயிற்றுவிக்கப்படுவதாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். இந்த எதிர்ப்பை தொடர்ந்து அமெரிக்காவில் பல பள்ளிகளிலும் யோகா பயிற்றுவிப்பது தடை செய்யப்பட்டது. இருப்பினும் சில பள்ளிகளில் தொடர்ந்து யோகா கற்றுக் கொடுப்பது அமெரிக்க பெற்றோர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. யோகா பயிற்சியை நிறுத்தாததால் ஏராளமான பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை பள்ளியில் இருந்து நிறுத்தி விட்டனர். இது தொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
பெற்றோர்கள் தொடர்ந்த வழக்கை அடுத்து தீர்ப்பிற்கு முன் சோதனை முறையாக சில வாரங்கள் கோர்ட் அறையிலேயே குழந்தைகளுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சி, யோகா ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் முன்னிலையிலேயே நடத்தப்பட்டது. இறுதியாக கலிபோர்னியாவைச் சேர்ந்த நீதிபதி ஜான் மேயர், யோகா பயிற்சி குறித்த தனது கருத்தை தெரிவித்தார். அதில் அவர் கூறியதாவது இந்த யோகா பயிற்சி மதசார்பின்மையை ஏற்படுத்துவது சோதனையில் வெளிப்படையாக தெரிய வந்துள்ளது; மாணவர்களிடையே ஒற்றுமை உணர்வை ஏற்படுத்தும் இந்த பயிற்சியை எதிர்க்க முடியாது; நானும் பிக்ராம் யோகா வகுப்புக்களில் கலந்து கொண்டுள்ளேன்; யோகா பயிற்சி முறைகளுக்கும், உடற்பயிற்சி முறைகளுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை;
இணையதளங்களிலும் யோகா குறித்த முறைகளை விரிவாக விளக்கப்பட்டுள்ளது; விக்கிபீடியா உட்பட அனைத்திலும் ஆராய்ந்த வகையில் யோகா எவ்வித மதம் சார்ந்த விஷயங்களையும் பரப்பும் விதமாக இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.இதனால் அமெரிக்காவில் உள்ள யோகா ஆர்வலர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர்.

Comments

Popular posts from this blog

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

மூலிகைகள் நிறைந்த பூமி பாரதம். இங்கு அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், தங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகளை கண்டறிந்து மருந்தாக பயன்படுத்தியுள்ளனர்.

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

கருப்பைக்குள்ளிருந்து கதவைத்திறக்க காத்துக்கொண்டிருக்கும் குழந்தையோடு வெளியிலே இருந்தே விளித்துப் பேசும் உக்தி தான் இந்த வளைகாப்பு. 

தாம்பத்திய உறவின் வலிமையை அதிகரிக்க வேண்டுமா …??

குண்டலி முத்திரை எனப்படும் இந்த முத்திரை தாம்பத்தியத்திற்கான முக்கியமான முத்திரை ஆகும். தினமும் இதை 15 நிமிடம் பயிற்சி செய்வதன் மூலம் உடலுறவுப் பிரச்சினைகள் தீரும், என்றும் இளமையுடன் இருக்கலாம்.