அதிகரிக்கும் சிசேரியனுக்கு என்ன காரணம்?

தாய்மை-300x150
சிசேரியன் அதிகரிக்க மருத்துவர்கள் எந்த வகையிலும் காரணமில்லை. அந்தக் காலத்தில் நமது அம்மாக்களும் பாட்டிகளும் அம்மியில் அரைத்தார்கள். கிணற்றில் தண்ணீர் இறைத்தார்கள். 

குழாயில் தண்ணீர் அடித்து நிரப்பினார்கள்.

இன்றைய பெண்களுக்கு எல்லாவற்றுக்கும் எந்திரங்கள் வந்து விட்டதால் உடலுழைப்பு என்கிற பேச்சுக்கே இடமில்லை. வேலைக்குச் செல்கிற பெண்களும் பெரும்பாலும் ஒரே இடத்தில் உட்கார்ந்தபடியே வேலை பார்க்கிறார்கள். அந்த வேலையிலேயே களைத்து விடுகிறார்கள். 

உடலியக்கமே இருப்பதில்லை. கிராமங்களில் பிரசவ நாள் வரை எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டிருப்பார்கள். நகர வாழ்க்கையில், கர்ப்பம் என்பதை ஏதோ ஒரு நோய் மாதிரிப் பார்க்கிறார்கள்.

நின்றால் ஆகாது… நடந்தால் ஆகாது… இப்படி ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். உடல் நோகாமல் அப்படியே ஒரு பொம்மை மாதிரி இருக்கிறது, உண்மையில் கர்ப்பம் தரித்த 4வது மாதத்தில் இருந்தே நமது உடல் சுகப்பிரசவத்துக்காக தயாராகத் தொடங்கும். 

இடுப்பெலும்பு விரிய ஆரம்பிக்கும். பிரசவ நேரம் நெருங்கியதும், குழந்தையின் தலை இறங்க, இறங்க, கர்ப்பப்பை வாய் அழுத்தப்பட்டு, ‘பிராஸ்டோகிளான்டின்’ எனப்படுகிற ஹார்மோன் சுரக்க ஆரம்பித்து, வலியைத் தூண்டும், கர்ப்பப்பை சுருங்கி, விரிந்து, தலை வெளியே 
தள்ளப்பட்டு குழந்தை பிறக்கும்.

சிலருக்கு பிரசவ தேதி நெருங்கியும் வலி வராது. அவர்களுக்கு மருந்து அல்லது மாத்திரை வைத்து வலியை வரவழைப்பதுண்டு. இடுப்பெலும்பு மற்றும் கர்ப்பப்பை வாய் விரிவடையாத நிலையில், அவர்களுக்கு சிசேரியன்தான் செய்ய வேண்டி வரும்.


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!