பிள்ளைகளே உங்கள் தாய்க்கு என்ன செய்ய வேண்டும் தெரியுமா?

download-32
தாய்மையை போற்றவும் தாய்மைக்கு நன்றி செலுத்தவும் வேண்டி உலகெங்கும் கொண்டாடப்படுகிறது மதர்ஸ்டே.
அன்றைய தினம் தங்களின் அம்மாக்களுக்கு பலவிதமான பரிசுப்பொருட்களை கொடுப்பது வழக்கம். வருடத்தின் ஓர் தினத்தன்று பரிசு கொடுப்பதுடன் பிள்ளைகள் தங்கள் கடமையை முடித்து கொள்ள முடியாது.

வளர்ந்த பிள்ளைகள் தங்கள் தாயின் பிரச்சனைகளை தெரிந்து கொண்டு புரிந்து நடந்து கொள்வதே அவளுக்கு கொடுக்கும் பெரிய பரிசாகும்.

வெளிநாடு அல்லது வெளியூரில் இருக்கும் பிள்ளைகள் அடிக்கடி தாயுடன் பேசுவதும், ஏதாவது அறிவுரை அல்லது அபிப்பிராயம் கேட்பதும் நல்லது.

தாயின் ஆசைகளை தெரிந்து கொண்டு முடிந்ததை நிறைவேற்றலாம். அவளின் ரசனைக்கேற்ற ஒரு பொழுது போக்கை அவளை செய்யத்தூண்டலாம். 

யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் ஈடுபடஊக்கப்படுத்தலாம். முடிந்தால் சேர்ந்தும் செய்யலாம். அவளுக்கு பிடித்த ஒன்றை கற்று கொள்ள ஏதாவது ஒரு படிப்பில் பயிற்சியில் சேர்த்து விடலாம்.

குழந்தையாய் இருக்கும் போது பாட்டு கிளாஸ், ட்ராயிங் கிளாஸ், ஹிந்தி கிளாஸ் என்ற தன்னை அழைத்து சென்ற அம்மாவை அதே மாதிரி அவளுக்கு பிடித்த சமையல் கிளாஸ், கம்ப்யூட்டர் கிளாஸ், பஜன் கிளாஸ் என்று அனுப்பி வைக்கவும்.

சத்தான உணவு, பால், புரதம் போன்றவற்றை போதுமான அளவு எடுத்து கொள்கிறாளா என்று சோதிக்கலாம். ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை, ரத்தகொதிப்பு, அளவுகள் அவளுக்கு சரியாக உள்ளதா என்று பரிசோதிக்கலாம்.

கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய்களை தடுப்பு பரிசோதனைகளை செய்து கொண்டாளா என்று கவனிக்கலாம்.
பற்களை ஒழுங்காக பராமரிக்கிறார்கள் என்று கவனிக்கலாம். 

தாயிடம் தன் சிறுசிறு தேவைகளை நிறைவேற்றி கொள்ளபணம் இருககிறதாக என்பதை உறுதிப்படுத்திக்கெள்ளலாம். இதெல்லாம் செய்ய பிள்ளைகளுக்கு சிறிதளவே நேரமும் ஞாபகமும இருந்தால் மட்டும் போதும். 

தன் முழு கவனத்தையும் கணவர் குழந்தைகள் மீது மட்டுமே வைத்து தன்னை கவனிக்க மறந்த தாய்க்கு வேறென்ன பரிசுகளை பிள்ளைகள் தரமுடியும்.


Comments

Popular posts from this blog

வளைகாப்பு சடங்கு செய்வதன் அர்த்தம்

இழந்த ஆண்மையை திரும்பப் பெறுவது எப்படி?

சித்தர்கள் வகுத்த மரணத்தைத் தள்ளிப்போடும் நெல்லிக்கனி..!